மேற்கே விதைத்தசூரியனே உன்னை கிழக்கே | Merkey Vidhaitha Sooriyaney #ajithkumar #meena #vasundharadas

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by PSThenisaii
12 Views
பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

ஆண் : இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

ஆண் : விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

ஆண் : மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து

ஆண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
………………………………….

ஆண் : கூட்டுப்புழு
கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால்
சிறகு வரும் மெல்ல

ஆண் : ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே
வானம் பெரிதல்ல ஓஹோ
ஓஓஓ ஓஹோ ஓஓஓ

ஆண் : இதயம் துணிந்து
எழுந்த பின்னாலே இமய
மலை உந்தன் இடுப்புக்கு
கீழே

ஆண் : நரம்புகள் வரம்புகள்
மீறி துடிக்கட்டும் விரல்களில்
எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும்
புதுமைகள் கேட்கட்டும்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : சின்ன சின்ன
தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே
இருள் எதிர்த்து கொள்வோம்

ஆண் : குட்டுப்பட்ட
குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை நீளும் போது
புழுவும் புலி ஆகும்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

ஆண் : தீயின் புதல்வர்கள்
உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில்
சிலந்தியின் வலையா

ஆண் : புஜத்திலே வலுத்தவர்
ஒன்றாய் திரட்டுவோம்
நிஜத்திலே பூமியை
முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம்
வயதை ஆளட்டும்

ஆண் : மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

ஆண் : இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

ஆண் : விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

ஆண் : மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து

ஆண் : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

குழு : அச்சம் இல்லை
அச்சம் இல்லையே

Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES

5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​

Like our fb page @https://www.facebook.com/psentertimen...

Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Category
Music

Post your comment

Comments

Be the first to comment